அடிப்படை உபதேசங்கள்

இவைகள் உலகில் உள்ள அனைத்து நாட்டு மனிதருக்கும் ஜாதி, இன, மத பேதம் இல்லாமல் எல்லோரும் பெறும்படி எழுதப்பட்டது.

இவைகள் :

1. மனம் திரும்புதல்

2. மனம் திரும்புதலுக்கு ஏற்ற கனிகள்

3. பாவ மன்னிப்பு (இரட்சிப்பு)

4. ஞானஸ்நானம் (திருமுழுக்கு)

5. தேவனுடைய நியாயத்தீர்ப்பு

6. எப்படி நாம் ஆயத்தமாய் இருக்க வேண்டும்

7. பரிசுத்த ஆவியானவர்

8. ஆண்டவருக்குள்ளான நம் அனுதின வாழ்க்கை

    என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இவைகளை குறித்து மேலும் அதிகம் அறிய விரும்பினால் வேத புத்தகம் அதிகம் வாசியுங்கள்/ தியானியுங்கள். உங்கள் கேள்விகள் சந்தேகங்களுக்கு பதில் அளிக்க ஆவலாய் உள்ளோம்.

 மனம் திரும்புதல்

    அப்போஸ்தலர் : 3:20

    உங்கள் பாவங்கள் நிவர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனம் திரும்பி குணப்படுங்கள். மனம் சிந்தனை செய்கிறது. பல்வேறு சிந்தனைகளை செய்கிறது. (அல்லது) பல வேளைகளில் ஒரே சிந்தனையில் ஆழ்ந்து கிடக்கிறது.

    ஆதியாகமம் 6:5

    மனிதனின் இதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம், நித்தமும் பொல்லாதது என்று கர்த்தர் கண்டு தாம் பூமியிலே மனிதனை உண்டாக்கியதற்காக, கர்த்தர் மனஸ்தாபப்பட்டார். மனிதன் தன் மனதிற்கு சரி என்று தோன்றுபவற்றை செய்கிறான். சிந்தனை செயல்வடிவம் பெறுகின்றது. நல்ல சிந்தனைகள் நற்செயல்கள் (நற்கிரியைகள்) ஆக வடிவம் பெறுகின்றன. கெட்ட சிந்தனைகள் (பொல்லாத அல்லது துர்ச்சிந்தனைகள்) இதன் செய்கைகளாக (பாவங்களாக) செயல்வடிவம் பெறுகின்றன.

    பிரசங்கி 7:29

    இதோ தேவன் மனிதனை செம்மையானவனாக உண்டாக்கினார். அவர்களோ அநேக உபாய தந்திரங்களை தேடிகொண்டார்கள்.

    பாவம் :

    தேவன் விரும்பாத செயல்கள் / சிந்தனைகள் யாவையும் பாவமே. தேவன் செய்யச்சொன்னதை செய்யாததும், செய்யக்கூடாது என்றவைகளை செய்வதும் ஆகிய இரண்டுமே வானத்தையும் பூமியையும் படைத்த ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படியாத பாவமாகும்.

    ஏசாயா 59 :1,2

    இதோ இரட்சிக்க கூடாதபடிக்கு (விடுவிக்க கூடாதபடிக்கு) கர்த்தருடைய கை குறுகிப் போகவுமில்லை. கேட்கக்கூடாதபடிக்கு (நம்முடைய வேண்டுதல்கள்) அவருடைய செவிகள் மந்தமாகவுமில்லை. உங்கள் அக்கிரமங்களே (பாவச்செயல்கள் / சிந்தனைகள்) உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் பிரிவினை உண்டாக்குகிறது. உங்கள் பாவங்களே அவர் உங்களுக்கு செவி கொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. (தேவனுக்கும் நமக்கும் இடையே தொடர்பு இல்லாமல் செய்கிறது)

    சர்வ வல்லமை பொருந்திய கர்த்தர் நம்முடைய இருதயத்தின் சிந்தனைகளை அறிய வல்லவர்.

    1. நீதி மொழிகள் 15:11

    பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்கு பிரத்தியட்சமாய் இருக்க மனு புத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாய் இருக்குமல்லவோ?

    2. சங்கீதம் 7:9

    தேவரீர் இருதயங்களையும் உள்ளந்திரியங்களையும் (உள்ளத்தில் உள்ள சிந்தனைகள்)சோதித்து அறிகிறவர்.

    1 சாமு 16 :7

     மனிதன் முகத்தை பார்க்கிறான். கர்த்தரோ இருதயத்தை பார்க்கிறார். ஆகவே நம்முடைய மனதை பாவத்தை மன்னிக்க வல்லமையுள்ள தேவனை நோக்கி திரும்ப அழைக்கப்படுகிறோம். தேவனை நோக்கி திரும்புதல் என்பது ஆண்டவர் சொல்பவைகளை கவனித்து அவற்றிற்கு செவி கொடுக்கவும், அதனால் வரும் ஆசீர்வாதங்களான பாவமன்னிப்பு, சந்தோஷம், சமாதானம், பயமில்லாமை நாம் விரும்பிய காரியங்களை பெறுதல், கண்ணீர் கவலையில்லாத வாழ்க்கையும், முடிவிலே பரலோக இராஜ்யமாம் ஆண்டவரோடு வாழும் பாக்கியத்தை பெறும்படி அவரை நோக்கி பார்க்க வேண்டும்.

Page 1 of 3 1 2 3