மத்திய கிழக்கு நாடுகளின் ஜெப கூட்டமைப்பு

மத்திய கிழக்கு நாடுகளின் ஜெப கூட்டமைப்பு

எதையாகிலும் தேவை என்று கண்டால் அல்லது சாதிக்க வேண்டுமென்றால் அதை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் பிதாவிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதே இயேசு கற்றுத்தந்தது (பிலி 4:6; நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள், யோவா 14:13 நீங்கள் என் நாமத்தினால் எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக அதைச் செய்வேன் என்பார்). ஏனென்றால் தேவனால் மட்டுமே எல்லாம் ஆகும். நமது கடமை ஜெபிப்பது... கிரியைகளை நடப்பிப்பது அவர்....

2009-ம் ஆண்டு ஒருசில தேவ மனிதர்களின் கூட்டு ஆலோசனை முயற்சியால் உருவானது. இது எல்லா மத்திய கிழக்கு நாடுகளிலும் துவங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையின் பேரில் கத்தாரிலிருந்து பங்கு பெற்ற தமிழ் சபை போதகர்களின் ஆதரவோடு இந்த ஜெப கூட்டமைப்பு 2010-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு ஆகும். ஆகவே இந்த கூட்டமைப்பின் சிறப்பு அம்சமே எல்லா தமிழ் சபைகளும் இணைந்து நட்த்துவதே. இதற்கு ஒரு தனி சபையோ அல்லது ஒரு தனித்தலைவரோ பொறுப்பல்ல. மாறாக இதுமட்டுமாக இணைந்து செயலாற்றுகிற ஏழு தமிழ் சபைகளில் செயலாக்கமே இதன் சிறப்பம்சம் ஆகும். அதில் நமது இரட்சிப்பின் தொனி சபையும் ஒரு அங்கமாகும். சபைக்குக் குறைந்தபட்சம் இரு ஒருங்கிணைப்பாளர்கள் குழுவாக இணைந்து ஒரு போதகர் தலைமையிலும் அதோடு 6 மாதத்திற்கொருவராக ஒரு சபையின் ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்படுகிறது. மாதம் ஒருமுறை குழுவாகக் கூடி இந்த ஜெப கூடுகையை சிறப்பாகச் செய்ய திட்டமிட்டு ஏழு சபைப் போதகர்களைக் கொண்டு ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் குறிக்கப்பட்ட சபை பொறுப்பில் ஜெப ஆராதனை நடை பெறுகிறது .

நோக்கம்:.

* நாம் வாழும் இந்த தேசத்திற்காக நாம் பாரத்தோடு ஜெபிப்பது. தேசத்தில் தேவ நாமம் உயர்த்தப்பட.....

* நாம் சுகித்திருக்கும்படி இந்த தேசத்தை ஆசீர்வதிக்கவும், இதை ஆளுபவர்களுக்காக ஜெபிப்பது.....

* அதைப்போன்று மத்திய கிழக்கு நாடுகள் அனைத்திற்காகவும், அதன் சமாதானத்திற்காகவும் ஜெபிப்பது....

* பல மொழி, பல தேசத்தார் இங்கு உண்டு. ஆராதிக்க ஆலயம் இல்லாதவர்களுக்கு ஆலயம் கட்டப்பட......

* நாம் வாழும் இந்த நாட்களில்தானே இந்த ஜனத்தாரோடு நாமும் சேர்ந்து கிறிஸ்துவை ஆராதிக்க.....

* இந்த தேசத்தைப் போன்று சவுதி அரேபியாவும் தேவனை ஆராதிக்கும் திறந்த தேசமாக மாற வேண்டும்......

* மத்திய கிழக்கு தேசங்களின் குறிப்பறிந்து அதற்காக ஜெபிப்பது.....

* சபை ஒற்றுமைக்காக, சபைகளிலே எழுப்புதல் உண்டாக....

* சபையை நடத்துகிறவர்களுக்காக, சபைகளில் நடக்கும் ஊழியங்களுக்காக...

* அனைத்து மொழியிலும் சபைகள் உருவாக.....

* ஊழியம் செய்யும் அனைவருக்காகவும், புதிய ஊழியக்காரர்களை சபைகளில் எழுப்ப....

* சத்துருவின் வல்லமைகளை எதிர்த்து போராடி ஜெபிக்க....

இசைத் தட்டு

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 1

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 2

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 3