Women's Ministry

பெண்கள் சிறப்பு பகுதி

புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டை கட்டுகிறாள் (நீதி 14:1). குடும்பம் என்பதே இங்கு வீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும் (நீதி 24:3). குடும்பம் கட்டப்பட, நிலைநிறுத்தப்பட அதிக பங்கு வகிப்பவர்கள் பெண்களே. அவர்கள் புத்தியுள்ள, ஞானமுள்ள, விவேகமுள்ள பெண்களாக இருந்தால் நிச்சயமாக குடும்பம் சிறப்பாய் கட்டப்படும், ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பமாய் மாறும். தற்காலத்தில் குடும்பங்களில் சத்துரு பிரிவினை உண்டாக்கவும், கருத்து வேறுபாடு ஏற்படுத்தி, அன்பு தாழ்ச்சியைக் கொடுக்கும் முடிவுகளைதான் காண முடிகிறது. இந்த நிலையில் பெண்கள்தான் தங்களது ஜெபத்தினாலும், தேவனை மட்டும் சார்ந்து வாழ்வதாலும் சத்துருவை ஜெயித்து குடும்ப வாழ்வை நடத்த முடியும். .

வேதத்தில் 1சாமு 25 1:38 - மாகோனில் ஒரு குடும்பம், கணவன் நாபால், பெரும் செல்வந்தன், முரடன், தீய செயல் புரிபவன். மனைவி அபிகாயில் மகா புத்திசாலி, ரூபவதி. வனாந்திரத்தில் தாவீது, சவுலுக்கு பயந்து வாழ்ந்து வந்த சமயத்தில் உணவுக்காக நாபாலிடம் வாலிபர்களை அனுப்புகிறான் (1 சாமு 25:6-8). அதற்கு நாபால் "இன்ன இடத்தார் என்ற அறியாத மனுஷனுக்கு கொடுப்பேனோ" என்று சொல்லி தாவீதை அற்பமாக பேசுகிறான். தாவீது மூர்க்கம் கொண்டு நாபாலுக்கு உரிய அனைத்தையும் விடியுமுன்பு உயிரோடு வைப்பதில்லை என சவால் விடுகிறான். இதை வேலைக்காரர் மூலம் அறிந்த அபிகாயில் புத்தியாய் செயல்பட்டு தன் குடும்பம் முழுவதையும் அழியாமல் பாதுகாக்கிறாள். கர்த்தர் அவளுக்கு ஞானம் கொடுக்கிறார். தீவிரமாய் செயல்படுகிறாள்.

பெண்கள் சோம்பலுள்ளவர்களாய் அல்ல, சுறுசுறுப்பு உள்ளவர்களாய் (நீதி 31:27) குணசாலியானவர்களாய் இருக்க வேண்டும். அபிகாயில் தாவீதை சந்திக்க தன் வேலைக்காரரோடு புறப்பட்டு போகிறாள். தாவீதை கண்ட போது தரையில் முகங்குப்புற விழுந்து பணிகிறாள். இது அவளது தாழ்மையைக் குறிக்கிறது. தாழ்மைக்கும், கர்த்தருக்கு பயப்படுகிறதற்கு கிடைக்கும் பெலன் மேன்மையே. அபிகாயில் தன் கணவன் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்கிறாள். தீவிரமாய் செயல்பட்டதாலும், தாழ்த்தி மன்னிப்புக் கேட்டதாலும் தன் குடும்பம் ரத்தம் சிந்தாதபடி தாவீதை நிறுத்தியது அவளது புத்தியான செயலே. மேலும், வனாந்திரத்தில் இருந்த தாவீதுக்கு சமாதான வாழ்த்துதல் சொல்லி ஆசீர்வதித்தாள் (1 சாமு 25:31). தாவீதும் அவளை ஆசீர்வதிக்கிறான்.

பெண்கள், மரியாளின் (இயேசுவின் தாயார்) தாழ்மை (லுக் 1:38), எஸ்தரின் நம்பிக்கை, துணிவு (எஸ் 4:13,14,16), ராகாப்பின் தைரியம் (யோசு 2:4), ஆதிகால திருச்சபையின் தூண்களான பிரிஸ்கில்லாவின் (அப் 18:1-3,18) சுவிசேஷ பாரம் ஆகிய நற்குணங்கள் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

கர்த்தருக்கு பிரியமானவர்களே! தேவனை சார்ந்து, தாழ்மை, மன்னிக்கும் சுபாவம், சுறுசுறுப்பு ஆகியவற்றோடு, சூழ்நிலைகளை அறிந்து எக்காலத்திலும் தேவ பயத்தோடு வாழ கற்றுக்கொள்ளுவோம். கர்த்தருக்குள் பரிசுத்த சந்ததியை கட்டி எழுப்புவோம்.

இசைத் தட்டு

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 1

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 2

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 3