ஆத்தும ஆதாய ஊழியங்கள்

ஆத்தும ஆதாய ஊழியங்கள்

ராஜ்ஜியத்தினுடைய இந்த சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்பொழுது முடிவு வரும்” உலகத்தின் முடிவை எதிர் நோக்கி, கிறிஸ்துவே வாரும் (மாரநாதா) என்று காத்துக் கொண்டிருக்கிற நாம் செய்யவேண்டிய பெரிய பணி “ஜாதிகளுக்குச் சுவிசேஷம்” மட்டுமல்ல “நீங்கள் புறப்பட்டு போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி சத்தியத்தை உபதேசியுங்கள்...” என்பது இயேசு கிறிஸ்துவின் கட்டளை (மத் 28:18-20). யாக் 5:20 இப்படியாகக் கூறுகிறது “தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்” பாவத்தில் அழிந்துபோகும் மனு உலகுக்கு யார் பொறுப்பு? இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் இணைக்கப்பட்ட யாவருமல்லவா....

யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாகப் போவான் என்கிற தேவனுடைய ஏக்கத்துக்கு கீழ்ப்படிதலாக அழைப்புப் பெற்ற, வாஞ்சையுள்ள இரட்சிப்பின் தொனி சபை சகோதர சகோதரிகள் சுவிசேஷ ஊழியத்தில் பங்கேற்று செய்துவருகிறார்கள். விசுவாசித்து சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப் படுகிறவர்களை தேவன் சபையில் சேர்த்துக்கொண்டு வருகிறார்..

நோக்கம்:.

# தேவனுடைய கட்டளையை நிறைவேற்றுவது....

# சுவிசேஷம் சொல்லாத முகாம்களுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் சொல்லுதல்

# சத்தியத்தை சத்தியமாய் போதிப்பது.

# பாரம்பரியத்திலிருந்து, விக்கிரக ஆராதனையிலிருந்து விடுவிப்பது.

# அன்புக்காக, ஆதரவுக்காக ஏங்குகிறவர்களுக்கு கரிசனையாயிருப்பது.

# நெருக்கமான தேவையோடிருப்பவர்களுக்கு உதவி செய்வது.

# தனியாள் ஆத்தும ஆதாயப் பணி, முகாம் ஊழியங்கள்.

# ஊழியத்தில் பங்கேற்று செய்ய வருபவர்களுக்கு அழைப்பை உறுதிப்படுத்தி ஊக்கப்படுத்துதல்.

# ஊழியத்திற்கான போதிய ஆலோசனைகள் (எங்கு, எப்படி, யாருக்கு ஊழியம்)

# தேவையான கையேடுகள் மற்றும் கைப்பிரதிகள்.

# தேவ மனிதர்களைக் கொண்டு சீரான பயிற்சிகள்.

# சீரான ஊழியர் கூட்டம் நடத்துதல், ஜெபித்தல்

போன்ற காரியங்களை சபை செய்து வருகிறது. இசைந்த மனமும், இணைந்த கரங்களும் எப்பொழுதும் வெற்றியைக் கொண்டுவரும் என்பது உண்மை. இரண்டு இரண்டு பேராக, குழுவாக சென்று ஜனங்களை சந்தித்து, தேவன் அனுமதிக்கிற இடங்களில் ஜெபகூடுகை நடத்தி ஜனங்களை அன்போடு விசாரித்து, தேவைகளுக்காக ஜெபித்தும் ஊழியம் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆத்துமாக்களின் தேவைகளுக்காக மன்றாடி ஜெபித்து அதிசய அற்புதங்களை கண்டு கொள்ளவும், சாட்சியாக கேட்கவும் தேவன் கிருபை செய்து வருகிறார்.

இசைத் தட்டு

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 1

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 2

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 3