சிறுவர் ஊழியங்கள்

சிறு பிள்ளைகளை ஆண்டவர் நேசிக்கிறவர். அவரிடத்தில் கொண்டுவந்த சிறு பிள்ளைகளை சீஷர்கள் அதட்ட, அதைக்கண்ட இயேசு விசனமடைந்து, அவர்கள் என்னிடத்தில் வர தடைபண்ணாதேயுங்கள் என்று சொல்லி அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அதோடு தேவனுடைய ராஜ்ஜியத்தை சிறு பிள்ளைகளுக்கு ஒப்புமையாக இயேசு கூறுகிறார். (மாற் 10:13-16)

சங் 8:2 – “பகைஞரையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்”

ஆகவே சிறுவர்களும் முக்கியத்துவம் கொடுத்து, முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டியவர்கள். அவர்கள் சிறுபிராயம் முதலே நன்றாக போதித்து வளர்க்கப்பட வேண்டும். அவர்கள்தான் வளரும் மிஷனரிகள். இதை இரட்சிப்பின் தொனி சபை சிரமேற்கொண்டு செவ்வனே செய்ய திட்டமிட்டு, சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு செய்துவருகிறது. .


திட்டங்கள்:

* சிறுபிள்ளைகளுக்கு ஏற்ற போதனைகளைக் கொடுத்து சக சிறுவர்களோடு அன்புகாட்டச் செய்வது.

* வேதத்தை நேசிக்க கற்றுக்கொடுப்பது.

* அவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் அவர்களுக்கு சத்தியத்தை போதிப்பது.

* திட்டமிட்ட பாடங்கள் மூலம் வகுப்புகள்.

* அவர்களுக்குள் புதைந்து கிடக்கும் தாலந்துகளை இறைப்பணிக்கென தெரிந்துகொள்வது..

* பாடல்கள் மூலம் தேவனைத் துதிக்க வழி நடத்துவது.

* போட்டிகள் நடத்தி உற்சாகப்படுத்துவது.

* பெற்றோர் கூடுகை நடத்தி பிள்ளைகளை கவனமேற்கச் செய்வது.

* விடுமுறை வேதாகமப் பள்ளி நடத்தி விடுமுறை நாட்களை பிரயோஜனமுள்ளதாக்குவது. .

இசைத் தட்டு

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 1

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 2

அர்பணிப்பின் ஜெயகீதங்கள் 3